Saturday, June 5, 2010

இன்னொரு கற்பழிப்பு ..........

வைகறை பொழுது

விடிய விடிய

தொன்மைத் தொழிலில்

தீ ரணம் !


விடியல் தொட்ட

கடற்கரை மணலில்

கால் பரப்பி

அயர்ந்த நடை !


செம்பிழம்பு

விண்ணோடும்

என்னோடும்

விரவிய வேளை !


இரவில் எவனோ கடித்த

தனங்கள் வலி

மறந்து தென்றலில்

இறுகிய வேளை!


பேய்ஒருவன்

பிய்த்தெடுத்த

பிண்டத்தின்

ரணம் மறந்து

கடல் ஓசை

குலவிய வேளை!


விடிய விடிய

விற்றுப் பெற்றதில்

பெறாததைப்

பெற்ற வேளை!


இரண்டாயிரம் முறை

இருளிள் கொடுத்ததை

கடலில் கலவிப்

பெற்ற வேளை !


உந்தல்கள்

உரசல்களில்

உணரா உச்சத்தை

ஊவிட்ட காற்றில்

உணர்ந்திட்ட வேளை !


விருந்து ரெடியா ?

தரகனின் குறுஞ் செய்தியால்

கற்பழிக்கப்பட்டேன்

இரண்டாயிரத்து ஒன்றாம் முறை !